வெள்ளி, 15 ஜூன், 2018 | By: Ananda

அதியும் நீயும்..



ஒருவேளை உன்னை மறந்துவிட்டேனோ என்னவோ..நொடிக்கு ஒரு முறை உன்னை நினைவுபடுத்திக்கொண்டே  இருக்கிறாள்..அவள் கண்களில் இருக்கும் குறும்பு, அந்த சிரிப்பு, கோபம், பிடிவாதம், தானே செய்துகொள்ள வேண்டும் என்ற வைராக்கியம்..அக்காவை அவள் ஆட்டிவைக்கும் தோரணை..அணைத்திலும் உன் சுவடு தெரிகிறது எனக்கு..பல வருடங்களுக்கு முன் நீயும் நானும் உரையாடியது ,இன்று பல யுகங்களுக்குமுன் பேசியதுபோல் தோன்றுகிறது..உனக்கு என்னைப்போல் ஒரு மகளும் எனக்கு உன்னை போல் ஒரு மகனும் பிறக்கும்..என்னை போல் இருப்பதால் உன் மகள் மக்காகவும் , உன்னைப்போல் இருப்பதால் என் மகன் அறிவாளியாகவும் இருப்பார்கள் என்று சொன்னேன்..அதற்கு உனக்கு பிறக்கும் பிள்ளையை மருத்துவமனையில் இருந்து நீ பார்க்கும் முன்னரே எடுத்து சென்று விடுவேன் என்றாய்..இன்று சற்றே மாற்றம்..உன்னை போல் மகள் ஒன்றும் என் கணவனின் அக்காவை போல் மகள் ஒன்றும்..உன்னிடம் நான் சிக்கி தவித்ததுபோல் , இன்று அவளிடம் சிக்கித்தவிக்கிறாள் அக்கா..என்னைப்போல் இருக்க என் மருமகனோ மருமகளோ இல்லாமல் போனது..