திங்கள், 7 ஜூலை, 2014 | By: Ananda

ஏக்கம்



என்னதான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து,
ஆடம்பர வாகனங்களில் பயணித்து,
நவநாகரீக வாழ்வு முறையை ஏற்றாலும்,
அந்த மொட்டைமாடி நிலாவுக்கும்,
குட்டிச்சுவர் வெட்டிக் கதைகளுக்கும்,
பேருந்து ஜன்னல் தெறிக்கும் மழைச் சாரலுக்கும்,
ஓட்டமும் கூட்டமுமாய் மின்தொடர் வண்டி பயணத்துக்கும்,
சுட்டெரிக்கும் வெயிலில்,வழியும் வேர்வை-
உறிஞ்சும் அந்த பருத்தி உடைக்கும்,
அடிக்கொருமுறை நின்று புன்னகைத்து பேசும் முகங்களுக்கும்,
அந்த சாலையோர பூக்கடைகளுக்கும்..
வாசலிலேயே வீற்றிருக்க சொல்லும், 
வண்ணக் கோலங்களுக்கும்
ஏங்கதான் செய்கிறது-
இந்த பாழும் மனம்..

2 கருத்துகள்:

JC Nithya சொன்னது…

எங்கு கிளைகள் பரப்பி விரிந்து நின்றாலும்
வேர்கள் இருப்பது இன்னமும் இங்கு தானே...
ஏங்கத்தான் செய்யும்...

Ananda சொன்னது…

y suddenly after so long seeing the post and putting comment..:)
anyway happy to see some comment in my blog talai:)