விடியல் பொழுதில் திறக்கும்
சொர்க்க வாசலைப் போல,
பருவம் பூத்த வேளையில்,
கல்லூரி வாசல் நோக்கி,
ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள்
நானும் அடக்கம்..
முதல் நாள்,முதல் வகுப்பே
தாமதமாய் நுழைந்த ஞாபகம்,
பரிச்சயம் இல்லாத முகங்கள்,
இருக்கை தேடி,அறிமுகம் நாடி
பிள்ளையார் சுழி போட்ட,
முதல் கல்லூரி நட்பு,
இன்றும் தொடரும் இன்ப இன்னல்...
இடைவெளியின்றி,ஒவ்வொரு இடைவேளையும்
அடித்த லூட்டி,
கண்ணைச் சொருகும்,வகுப்பு நேரங்களில்,
குறும்புடன் படித்த
துண்டு சீட்டு பாடங்கள்,
ஒரே நிற ஆடை அணிந்த நாட்களில்,
ஓயாமல் ஒட்டிய ஞாபகங்கள்,
வெள்ளை சட்டையில்
தேநீர் கறையாகிய நினைவுகள்,
பரிட்சை நேரங்களில்
படிக்க மறந்த பாடங்களும்,
மறக்காமல் மாற்றிய பேனாக்களும்,
தேர்வு முடிவு முன் தோன்றும் திகிலும்,
பின் தோன்றிய வேதாந்தமும்,
முதல் நாள் பேருந்து பயணத்தில்
போடும் சண்டைகளும்,
அடுத்த நாள் பயணத்தில் தேடிய சமாதானமும்,
விடுமுறை நாட்களில்
ஓயாமல் பேசிய தொலைபேசி கதைகள்,
வரலாறு காணாத தொலைபேசி கட்டனங்கள்,
வினாத் தாளின் பின்பக்கம் எழுதிய
எண்ணற்ற கவிதைகள்,
தேடிய விழிகளுக்கு கிடைத்த
பார்வை பரிசுகள்,
எத்தனை முறை கேட்டாலும்
புத்தியில் ஏறாத,
ஆசிரியரின் கடுந்சொர்க்களும் பாடங்களும்,
ஒன்றாய் உணவருந்திய உல்லாசங்களும்,
அன்பு,நட்பு,கோபம்
ஊடல்,கூடல்,பிரிவு
மௌனம்,வலி,குறும்பு
என்று
மரக்கிளை முளைத்த இலைகளை போல,
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமாய்,
ஆயிரம் கோடி நினைவுகள்,
என்றாலும்..
ஒரு துளி கண்ணீரால்,
முற்றுப்புள்ளி வைக்கலாம்,
கல்லூரி வாழ்க்கைக்கும்,
இந்த கவிதைக்கும்,
என் நினைவுகளுக்கு அல்ல..
சொர்க்க வாசலைப் போல,
பருவம் பூத்த வேளையில்,
கல்லூரி வாசல் நோக்கி,
ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள்
நானும் அடக்கம்..
முதல் நாள்,முதல் வகுப்பே
தாமதமாய் நுழைந்த ஞாபகம்,
பரிச்சயம் இல்லாத முகங்கள்,
இருக்கை தேடி,அறிமுகம் நாடி
பிள்ளையார் சுழி போட்ட,
முதல் கல்லூரி நட்பு,
இன்றும் தொடரும் இன்ப இன்னல்...
இடைவெளியின்றி,ஒவ்வொரு இடைவேளையும்
அடித்த லூட்டி,
கண்ணைச் சொருகும்,வகுப்பு நேரங்களில்,
குறும்புடன் படித்த
துண்டு சீட்டு பாடங்கள்,
ஒரே நிற ஆடை அணிந்த நாட்களில்,
ஓயாமல் ஒட்டிய ஞாபகங்கள்,
வெள்ளை சட்டையில்
தேநீர் கறையாகிய நினைவுகள்,
பரிட்சை நேரங்களில்
படிக்க மறந்த பாடங்களும்,
மறக்காமல் மாற்றிய பேனாக்களும்,
தேர்வு முடிவு முன் தோன்றும் திகிலும்,
பின் தோன்றிய வேதாந்தமும்,
முதல் நாள் பேருந்து பயணத்தில்
போடும் சண்டைகளும்,
அடுத்த நாள் பயணத்தில் தேடிய சமாதானமும்,
விடுமுறை நாட்களில்
ஓயாமல் பேசிய தொலைபேசி கதைகள்,
வரலாறு காணாத தொலைபேசி கட்டனங்கள்,
வினாத் தாளின் பின்பக்கம் எழுதிய
எண்ணற்ற கவிதைகள்,
தேடிய விழிகளுக்கு கிடைத்த
பார்வை பரிசுகள்,
எத்தனை முறை கேட்டாலும்
புத்தியில் ஏறாத,
ஆசிரியரின் கடுந்சொர்க்களும் பாடங்களும்,
ஒன்றாய் உணவருந்திய உல்லாசங்களும்,
அன்பு,நட்பு,கோபம்
ஊடல்,கூடல்,பிரிவு
மௌனம்,வலி,குறும்பு
என்று
மரக்கிளை முளைத்த இலைகளை போல,
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமாய்,
ஆயிரம் கோடி நினைவுகள்,
என்றாலும்..
ஒரு துளி கண்ணீரால்,
முற்றுப்புள்ளி வைக்கலாம்,
கல்லூரி வாழ்க்கைக்கும்,
இந்த கவிதைக்கும்,
என் நினைவுகளுக்கு அல்ல..
7 கருத்துகள்:
காலச்சுவடுகளில் கரையாது நிற்பது நினைவுகள் மட்டுமே என எடுத்துரைக்கும் வரிகள்.
நான் ரசித்து அனுபவித்த கல்லூரி நாட்களை நினைவூட்டும் வரிகள்.
chlm....enama ithu.....kan kalanga vechita......
took me back to my old college days....nd miss u a lot my first frnd in coll..... :)
aahaa?? kavithaayiniyaa neenga??
Nadakkattum. nadakkattum.
தங்களின் கவிதையை வாசித்த பின், வாழ்கையின் மிக இனிமையான தருணங்களான கல்லூரி நாட்கள் மீண்டும் வராதா என்கிற ஏக்கத்திற்கு உள்ளானேன்....!
நன்றி ஆனந்தா, தங்களின் அனைத்து கவிதை பதிப்புகளும் அருமை !! தொடர்ந்து பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்!
பிரசன்னா,தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்க்கும் என் நன்றி...:)
கருத்துரையிடுக