ஞாயிறு, 15 ஜூன், 2008 | By: Ananda

உறுப்புகளை தானம் செய்வோம்..


சக உயிர்களுக்காக....
கடைசி சொட்டு உருகி,இன்னும்
ஒரு சில நொடிகள் மட்டுமே,
பிரகாசிக்க போகும் மெழுகின் தீயில்,
புது விளக்கொன்று ஏற்றப்பட்டு,
மறுஜென்மம் எடுக்கும் வெளிச்த்தை போல,

வாழும் காலத்தில்,
வண்ணங்கள் அத்தனையும்,
விரும்பியவை அனைத்தையும்,
பார்த்து களித்த நம் இரு கண்களும்,
நாம் வாழ்ந்து முடிந்த பின்னாவது,
இருட்டை மட்டுமே பரிச்சய படுத்தி கொண்டு,
வண்ணமும் வடிவமும் இன்றி,
வாழும் உயிர்களுக்கு,
புதியதோர் பார்வையாய் இருக்கட்டுமே...

வாழும் காலத்தில்,
'என் இதய துடிப்பு நீ',
என்று பாடிய கவிதைகள் போக,
இதயம் துடிப்பது நின்ற பின்னும்,
இன்னொரு உடலில் நம் இதயம் துடிக்கட்டுமே...

வாழும் காலத்தில்,
கற்பனையில் காதலுக்காக,
கொடுத்த இதயத்தை,
உண்மையில் இன்னொரு உயிர் வாழ
இன்பமாய் பரிசு அளிப்போம்...

வாழும் காலத்தில்,
உல்லாசமாய் ஊதி தள்ளிய சிகரெட்டில்,
எத்தனையோ நாட்கள் ,
சிதைந்த நம் நுரையீரல்,
நாம் வாழ்ந்து முடிந்த பின்னாவது,
சுதந்திரமாய்,இன்னொரு உயிர்
சுவாசிக்க உதவட்டுமே...

உயிர் கொடுப்பதும்,காப்பதும்,
கடவுள்,தாய்,மருத்துவர் மட்டும் அல்ல,
நம்மாலும் இயலும்,
சக உயிர்களை சாகாமல் காப்போம்...

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

aalavana tamizh sorkkal azhagana idathil

விஜய் சொன்னது…

மடிந்த பிறகு
மண்ணில் மரிக்கவிருக்கும் உறுப்புகளை என்றும் மலர்ந்தே இருக்கச் செய்வோம் என எடுத்துச் சொல்லும் அருமையான வரிகள்.

Ananda சொன்னது…

thanks robert and thanks vijay