எனக்கு கிடைப்பதில்லை,
அவளுக்குத்தான் கிடைக்கிறது,
பார்த்ததும் ஒரு புன்னகையும்,
வீடு திரும்பியதும் வாரி அணைப்பும்,
நாள் முழுவதும் நடந்த கதைகள் விசாரிப்பும்,
தட்டில் ஒரு வாய் சோறும்,
இரவில் மார்போடு அணைப்பும்,
தோளொடு தூக்கமும்,
கனவு கலைந்து அழுதால் தேற்றி அரவணைப்பும்,
காலை அலுவல் செல்லும்போது முத்தமும்,
அவர்களுக்கே சென்று சேர்கிறது..
இரு மகள்களை பெற்ற
மனைவியின் நிலை..
1 கருத்துகள்:
மகிழ்வையும் பெருமிதத்தையும் கூட பரிதாபமாய் சொல்லும் கலை மனைவிகளுக்கே வாய்க்கிறது!!! ;)
கருத்துரையிடுக