பசி, தூக்கம், தாகம், கழிவு போலவே சில பழக்கங்களும், நம்மை ஆட்க்கொண்டு ஆட்டி வைக்கின்றன, சில நேரங்களில். புகை பிடிப்பதையோ , மது அருந்துவதையோ நிறுத்த முயற்சிப்போர் , அல்லது வெகு நாட்களாய் நிறுத்தி விட்டதாய் நினைப்போர், திடீரென அந்த நினைவு வந்துவிட என்ன செய்வது , ஏது செய்வந்தென்று அறியாமல் , தெளிவுக்கும் ஆசைக்கு அடிபனிவதற்கும் இடையில் சிக்கித் தவிப்பது போல்...கலவியில் மோகத்தின் உச்ச நிலை அடைந்துவிட்ட போது , எப்படி பொறுமையாய் பொத்தான்களையோ , கொக்கிகளையோ கையாள முடியாதோ..அது போலவே -நீண்ட நாட்களாய்த் தள்ளி வைத்துவிட்டேன்..எழுத்து, ஓவியம் என்று என் உயிர் வளர்க்கும் தீணிகளை..சமையல், அலுவலகம், பிள்ளைகள், பள்ளி ...என்று ஓயாத காலச் சக்கரம். மற்றபடி போதை மருந்து போல், நிதர்சனத்தை செரித்து கொள்ள புத்தகங்கள்..சாயங்காலம் அலுவல் முடித்து வீடு திரும்பியதும் , சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, மீண்டும் அடுப்பறைக்கு சென்று அதே சுழலில் சுழன்று உழன்று கரை சேர பிரயத்தனப்படும் வேளையில், எந்த எண்ணங்களோ உணர்ச்சிகளோ திடீரென புயலாகாமல் இருக்க, சமையலறையிலேயே வைத்திருக்கிறேன் - ஒரு JBL ப்ளூடூத் ஸ்பீக்கர். சோல் மியூசிக், குத்து பாடல்கள், 90ஸ் ஹிந்தி பாப் , black and white தமிழ் பாடல்கள், 90ஸ் ஆங்கில பாப் ஆல்பம் பாடல்கள், instrumental , பக்தி பாடல்கள் என்று என் ஒவ்வொரு mood க்கும் ஏற்றாற்போல் பல playlist சேமித்து வைத்திருக்கிறேன் youtube இல்.
நீண்ட வருடங்கள் பழகி வாழ்ந்துவிட்ட தம்பதிகளின் வாழ்வில் சில intimacies.. அந்த intimacies காரணமாக சில புரிதல், privileges உண்டு. ஒருவர் எதிரே ஒருவர் பல் விளக்கவோ, சிறுநீர் கழிப்பதோ அல்லது குளித்துக்கொண்டே ஒரு அன்றாட வழக்காடலில் ஈடுபட முடியுமோ, அது போலவே இந்த playlist பாடல்களும் ஒரு தனி மொழி..ஒரு வித உரையாடல்..சுற்றி பல பேர் இருக்கும்போது கூட கண்களால் ஆசை, குறும்பு, நக்கல், புருவம் உயற்றி ஓர் கேள்வி, கண்களை சந்திக்காமல் பார்வை தவிர்த்துக் கொண்டே தொடரும் கோபமான மௌனம் என்று வார்த்தை பரிமாற்றமே இல்லாமல் இருவருக்கு இடையே எத்தனையோ விதமான உரையாடல்கள் நிகழும். அது போலவே எங்கள் playlist களும். தென்றல் வந்து தீண்டும்போது..instrumental..அது peace , soothing comfort - weekend இல் நிதானமாக கேட்டுக் கொண்டே சமைக்க..sink நிரம்பி வழிந்து தண்ணீர் குழாய் வரை முட்டும் பாத்திரங்கள் இருக்க- கருத்தவன்லான் கலீஜா..ஆத்திச்சூடி..நியூ ஏஜ் ஆத்திச்சூடி..மரணம் mass மரணம்..சர சர மட மடவென சாமான்களை கழுவி கவிழ்த்து வைக்க. அதே வேகம் ஆனால் வேறு flavour - Hips dont lie - shakira , bailamos - enrique , shape of you..ஹிந்தி ரொமான்டிக் பாடல்கள்..bhol na halke halke ..main phir bhi tumko chaahoonga...இப்படி பல play list கள்.
இன்று மாலை தொடங்கியது 90ஸ் மெல்லிசை பாடல்கள்..முதல் பாடல்-பச்சைக் கிளிகள் தோளோடு..அந்த பாடல் வரிகளுக்கு நான் அடிமை..பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்..என் காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்..மனதை பிழிந்து எடுக்கும் வரிகள்..அடுத்து காதல் சடுகுடு..ஆனந்த யாழை மீட்டுகிறாய்..ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் மனம் உருகி கண்ணில் லேசாய் நீர் பெருகும்..பொதுவாக அப்பா மகள்உறவு சார்ந்த மிகவும் உருக்கமான பாடல்கள் என்னை பாதிப்பதுண்டு..அனால் இந்த பாடல் கேட்கும்பொழுது நான்பாதிப்படைவது நா.முத்துக்குமாரின் மகளை நினைத்து..நினைவு தெரிவதற்கு முன்பே அப்பாவை இழப்பது ஒரு வித துயரம்...ஆனால் இப்படி ஒரு பாடலை எழுதி இருக்க கூடிய அப்பாவை நினைவு கொள்ள முடியாதபடி செய்த விதி..அந்த அநீதியை நினைத்து ஒவ்வொரு முறையும் சற்று விம்மி அடங்கும் என் மனம்.அதை தொடர்ந்து இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன், என் ஸ்வாச காற்றே, மாய நதி இன்று..halchal hui பாடல்..மாதுரி தீட்சித் படத்தில் ஓர் அழகான பாடல்..kadhmon ko sambhaale ..nazron ka kya kare ..nazron ko sambhaale toh dhil ka kya kare ..
இப்படி உயிருக்கு நீரூற்றி தழுவும் பாடல்கள் பல ஓடி முடிந்தும் சஞ்சலம் நீங்கவில்லை மனதில். அடி மனம் எதையோ பிழிந்து கசக்கி கொண்டே இருந்தது. செரி ரைட்டு. last hope . மன அமைதியை தேடும்போது..பல நேரங்களில் இப்படி நடப்பதுண்டு. கந்த சஷ்டி கவசம். அதை பாடவிட்டு கூடவே கேட்டுக் கொண்டும் , பாடி கொண்டும் வெஜிட்டபிள் குறுமா தாளிப்பதும், பிள்ளைகளுக்கு சாதம் பிசைந்து கொடுப்பது என நடந்து கொண்டிருக்க ..என் எண்ணங்களெல்லாம் திரண்டு பாத்திரத்தை விட்டு பொங்கி வழிய போகும் பால் போல..'எழுது' 'எழுது' 'எழுது!!!!!'..ஒரு குரல் என் மூளைக்குள் மெல்ல பெருகிக் கொண்டிருந்தது.
காதல் சடுகுடு கேட்ட 5நிமிடங்களில் சஷ்டியா ??!! என்று என்னை பற்றி அறியாதோர் வியக்கலாம். ஆனால் என் கார்த்தி அசருவது இல்லை. அவன் போக்குக்கு அவன் Netflix யில் Locke & Key என்றொரு விறுவிறுப்பான தொடர் பார்த்து கொண்டிருந்தான். Another priviledge of intimacy and friendship. We can listen and feel for the same music and be at peace with the silence. We can live in the same house with two discordant notes of music and yet be in harmony with each other or sometimes listen to discordant loud notes of music when in anger just to spite each other, which is a different story altogether. Coming back to point..
கந்த சஷ்டி, குருமாவுக்கு இடையே..ஓயாமல்.."எழுது எழுது எழுது" என்ற குரல்..தப்பித்து சிறுநீர் கழிக்க சென்ற போதும்..அதே குரல்.."எழுது..எழுது"..கஷ்டப்பட்டு அந்த குரலை mute செய்தால்..background ல ..சஷ்டி-"முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட.." அவ்வளவுதான். kitchen ல பிரிட்ஜ் மேல chair போட்டு ஏறி , டைரி அ தேடு..ஷெல்ப் எ தெறந்து microtip pencil அ தேடு.சாப்பிடலாம் னு கலந்து வெச்ச சோத்துத் தட்ட left ல கடாசு..கழுவலாம் னு நெனச்ச கடாய தூக்கி ரைட் ல கடாசு. அடுப்புல கொதிக்கிற குறுமா வ off பன்னு . இப்போ இந்த நிமிஷம்..இந்த நொடி..எழுதியே ஆகணும்..தமிழா english ஆஹ்? கவிதையா கருத்தா? முதல் புத்திக்கும் கடைசி புத்திக்கும் சம்பந்தம் இருக்கா? Finesse ?? Rhyme ?? Reason ?? எந்த வெளக்கெண்ணெய்யும் இல்ல. ஊரு சனம் பிள்ளை குட்டி எல்லாம் தூங்கியாச்சு. champagne பாட்டில் எ ரொம்ப நாள் குலுக்கி திடீர்னு தெறந்துட்டா..பொங்கி வழிஞ்சு நாலாபக்கமும் தெறிக்கிற மாறி ..என் எழுத்துக்களும்..தெறிக்க தெறிக்க சுட சுட எழுதியாச்சு. என்ன எழுதினேன்னு தெரியல.சாப்பிடல சமைக்கல..ஆனா ஏதோ எழுதியாச்சு. கை வலிக்க வலிக்க ஆறு பக்கம்.இதை type பண்ணி blog ல ஏத்த இன்னும் எத்தனை நாள் வாரம் மாதம் ஆகும் னு தெரியல..ஆனா இன்னைக்கு இப்போதைக்கு எழுதியாச்சு.
With a feeling of peace, relief and adrenaline all at the same time..going back to குறுமா ..சோறு..சாமான்..etc etc . உயிர் பசி சற்றே அடங்கியது..இனி வயிற்று பசிக்கு..
One day inside the head of Anandalakshmi!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக