வியாழன், 8 செப்டம்பர், 2011 | By: Ananda

என் உயிர் பூ,உனக்காக..
















மணவாளன் கைப்பிடித்தப் பின்,

மறந்துப்போன பழைய நாட்குறிப்பை

தூசித்தட்டி,வெளிக் கொணர்ந்தேன் இன்று,

மண்ணில் இன்னும் மலராத

என் மலர்க்கொடி உனக்காக,

ஆயிரம் கோடி அணுக்கள்

உறைந்திருக்கும் என் குருதியிலே,

முதன் முதலாக உயிர் பெற்றுவிட்ட

என் உயிர்த் துளியடி நீ...

நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கிறேன்,

என்னை மீண்டும் எழுதத் தூண்டிய

புதுக்கவிதை-உன்னைக் கையில் ஏந்த,

உன் கிள்ளைக் குரல் கேட்க,

உன்னை வாரி அணைக்க,

நீ தத்தி-தத்தி நடை பழகும்

அழகை பார்த்து ரசிக்க,

உன் பிஞ்சு விரல் பிடிக்க,

உன் ஒரு முதல் சொல் என் காதில் ஒலிக்க,

இன்னும் 6 மாதம் காத்திருக்கிறேன் உன் அம்மா!!!!

1 கருத்துகள்:

JC Nithya சொன்னது…

//உயிர்த் துளியடி நீ...//

தாய்மை எப்போதுமே
பிரமிக்க செய்கிறது.

வேறு வார்த்தைகள் இல்லை
உணர்வை பகிர்ந்திட..