சனி, 23 ஆகஸ்ட், 2008 | By: Ananda

புதிய பயணம்




இதுவரை கடந்து வந்த நாட்களை
அலசி பார்க்க,
ஒரு நினைவு சுற்றுலா
சென்று வந்தேன்,
அதே பழைய பாதையில்,
இன்று நான் தொடங்குவதோர் புதிய பயணம்..
அன்னை விரல் பிடித்து
மழலையாய் தவழ்ந்த காலம் முடிந்து,
பள்ளிப் பருவத்தின்
வண்ண திருவிழா முடிந்து,
கல்லூரி காதலின்
எண்ணற்ற கனவுகள் முடிந்து,
இன்று , நான்!!!
வெறும் நானாக!!!
அன்னை,தந்தை,சகோதரர்,தோழர்கள்,காதலர்
என்று,
யாருடனும் நிழலாய் நடக்காமல்,
என் நிழல்,என்னுடன்,
என்னை மட்டுமே நம்பி,
எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி,
எதையும் தாங்கும் பக்குவத்துடன்,
இன்று நான்!!!
இது ஓர் புதிய பயணம்....
வழியெங்கும் இன்பமாய் சுதந்திர காற்று!!!

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

யாருடனும் நிழலாய் நடக்காமல்,
என் நிழல்,என்னுடன்,
என்னை மட்டுமே நம்பி,
எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி,
எதையும் தாங்கும் பக்குவத்துடன்,
இன்று நான்!!!
இது ஓர் புதிய பயணம்....
வழியெங்கும் இன்பமாய் சுதந்திர காற்று!!!
----------------
very true words
you have stolen words from my heart

Ananda சொன்னது…

thanks de..:)

விஜய் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Ananda சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.