சில சமயம், கருந்திரட்சைகளை,
சில சமயம் மீன்களை,
வேறு சில சமயம் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை-
உன் அழகுக் கண்கள் எனக்கு நினைவூட்டும்..
உனக்கு கயல்விழி, என பெயர்வெய்க்கத் தவறிநேனே-
என்று வருந்துகிறேன் பல சமயம்..
உயிரோட்டம் தெறிக்கும் உன் விழிகள்,
குறும்புத்தனம் சொட்டும் உன் குறு குறு பார்வை,
உன் கண்களின் அந்த ஒரு பொட்டு வெளிச்சம்
என் வாழ்வின் இருள் நீக்கப் போதுமானது..
உன் மழலைக் குரலில் என் பெயர் சொல்லி அழைக்கும் ஆனந்தமும்,
எனைக் கட்டி அணைத்து முத்தமிடும் பேரானந்தமும்-
போதுமடி எனக்கு..
அதனினும் பெருஞ்சொத்து வேறில்லை..
என் உயிர்ப்பூ சிந்திய முதல் மகரந்தத் துளியடி நீ-
என் 'கீர்த்தி '!!