கருத்தில் கருவிக்கொண்டே இருந்தாலும்-
காகிதத்தில் உதிர மறுக்கும் வார்த்தை போல்..
வாசகர் இல்லாத கவிதையை போல்..
கருவறை வாசலில் முட்டி நின்றும்-
பிரசவிக்க முடியாத சிசுவை போல்,
கிளை நுனியில் துளிர்க்கும் முன்பே-
சறுகாய் உலர்ந்துவிட்ட இலை போல்..
விளையத் துடித்தும்,நிலத்தைப் பிளக்காமல்-
புதைந்து கிடக்கும் விதைப் போல்..
மூடிக் கிடக்கும் இமைகளுக்குள்-
திறக்கத் துடிக்கும் கண்ணின் மணிகள் போல்..
வெளிவர துடித்துக் கொண்டிருக்கிறது-
எனக்குள் கட்டுண்டு கிடக்கும்-உண்மையான நான்!!!!